மாங்காலை பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஜெபீஸ், வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ஸ்ரீகலா பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஜெபீஸ் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததும், இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.