பளுகல் அருகே வன்னியூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ரவீந்திரன் (56) தனது குடும்பத்துடன் மகள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து ரவீந்திரன் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கைரேகை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.














