குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், பாசன குளங்கள், கால்வாய்கள் பல சேதமடைந்ததாக புகார் உள்ளது. இதில் கிள்ளியூர் ஒன்றியம் பள்ளியாடி பகுதியில் பாசன கால்வாய்களை சேதப்படுத்தி, சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட பாசன சபை தலைவர் வழக்கறிஞர் வின்ஸ்ஆன்றோ என்பவர் மாவட்ட கலெக்டர், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.