வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டால் அதற்குப் பதிலடியாக கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சில தினங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறும்போது, “பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆத்திரமூட்டும் வகையிலான இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கக் கூடாது.
55 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாகப் பிரிந்தபோது அவர்கள் அதன் விளைவுகளை அனுபவித்தனர். இப்போது அவர்கள் வங்கத்தின் மீது கண் வைக்க முயன்றால், இந்த முறை பாகிஸ்தான் எத்தனை துண்டுகளாக உடையும் என்பது கடவுளுக்கே வெளி்ச்சம்” என்றார்.
பாகிஸ்தான் அமைச்சரின் எச்சரிக்கைக்கு பதில் அளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்குத் துணிச்சல் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் விமர்சித்திருந்த நிலையில், ராஜ்நாத் சிங் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.














