Home உலக செய்திகள் ஆப்கானிஸ்தானில் 10 இடங்களில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் 10 இடங்களில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

0

பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணத்​தில் உள்ள கோஹாட் நகரில் அமைந்​துள்ள பழைய காவல் துறைத் தலை​மையகத்​தில் கடந்த செப்​டம்​பர் 18-ம் தேதி​ நடத்​தப்​பட்ட தீவிர​வாதத் தாக்​குதலில் 23 பேர் கொல்​லப்​பட்​டனர். இதனைத் தொடர்ந்து மேற்​கொள்​ளப்​பட்ட பாது​காப்பு நடவடிக்​கை​களில் 8 தீவிர​வா​தி​கள் சுடப்​பட்​டனர்.

உள்​நாட்​டுப் பாது​காப்​புத் தோல்வி​களை மறைக்க, செப்​டம்​பர் 21-ம் தேதி ஆப்​கானிஸ்​தானின் குனார், பக்​திகா மாகாணங்​களில் பாகிஸ்​தான் விமானங்​கள் நடத்​திய தாக்​குதலில் 3 பேர் கொல்​லப்​பட்​ட​தாக​வும், வீடு மற்​றும் கடை சேதமடைந்​த​தாக​வும் ஆப்​கானிஸ்​தான் குற்​றம் சாட்​டியது.

இதனையடுத்து செப்​டம்​பர் 23-ம் தேதி ஆப்​கானிஸ்​தானிலிருந்து 8 ட்ரோன்​கள் ஏவப்​பட்டு பாகிஸ்​தானின் எல்​லைப் பகு​தி​கள் தாக்​கப்​பட்​ட​தாக​வும், எனினும் எல்லை தாண்​டிய ஊடுரு​வலைத் தடுத்​த​தாக​வும் பாகிஸ்​தான் அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதற்​குப் பதிலடி​யாக, ஆப்கானிஸ்தானில் ட்ரோன்​கள் ஏவப்​பட்ட மற்​றும் அவை வைக்​கப்​பட்​டிருந்த 10 இடங்​களைக் குறி​வைத்து துல்​லிய​மான வான்​வழித் தாக்​குதல்​களை நடத்​தி​ய​தாகப் பாகிஸ்​தான் தகவல் தொடர்​புத்​துறை அமைச்​சர் அட்​டாவுல்லா தரார் எக்ஸ் தளத்​தில் தெரி​வித்​தார். எல்லை தாண்டிய இந்த மோதலால் இரு நாடுகள் இடையே பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

தங்​களின் இறை​யாண்​மை​யைக் காத்​துக்​கொள்​ளும் தற்​காப்பு உரிமை​யின் அடிப்​படை​யிலேயே இந்​தத் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​ட​தாக​ அமைச்​சர் அட்​டாவுல்லா தரார் விளக்​கம் அளித்​தார்.

பொது​மக்​கள் வசிக்​கும் பகு​தி​கள் மீது பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​து​வது கடுமை​யான அத்​து​மீறல் என்​றும், இதற்கு ஆப்​கானிஸ்​தான் தரப்​பிலிருந்து தக்க பதிலடி கொடுக்​கப்​படும் என்​றும் தலி​பான் அரசு செய்​தித் தொடர்​பாளர்​ ஸபிஹுல்​லா முஜாஹித்​ எச்​சரித்​துள்​ளார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version