Home உலக செய்திகள் அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்​ சூட்டில் 2 பேர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்​ சூட்டில் 2 பேர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

0

அமெரிக்கா​வின் வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டின் அதிபர் மாளி​கை​யான வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. இது உச்​சக்​கட்ட பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும். இந்​நிலை​யில், வெள்ளை மாளி​கைக்கு வடக்கே சுமார் ஒரு மைல் தொலை​வில் உள்ள லோகன் சர்க்​கிள் பகுதி​யில் நேற்று துப்​பாக்​கிச் சூடு நடந்​தது. அங்​குள்ள உடற்​பயிற்சி கூடத்துக்​குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்​பாக்​கி​யால் சுட்​டார்.

பின்​னர் உடற்​பயிற்சி கூடத்தை விட்டு வெளியேறிய அந்த மர்ம நபர் அரு​கில் உள்ள அடுக்​குமாடி குடி​யிருப்பு கட்​டிடத்​துக்கு சென்றார். அங்கு தரைத்​தளத்​தில் வாகனங்​கள் நிறுத்​தும் இடத்தில் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இத​னால் அங்கு பெரும் பதற்​றமும் பீதி​யும் உரு​வானது. அங்​கிருந்த அனைவரும் உயிர் பிழைப்​ப​தற்​காக நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த துப்​பாக்​கிச் சூட்​டில் ஒரு​வர் உயி​ரிழந்​தார்.

4 பேர் படுகாயம் அடைந்​தனர். துப்​பாக்​கிச்​சூடு குறித்த தகவல் கிடைத்​ததும் போலீ​ஸார் மற்​றும் பாது​காப்பு படை​யினர் சம்​பவ இடத்​துக்கு விரைந்​தனர். அவர்​கள் படுகாயம் அடைந்த நபர்​களை மீட்டு சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இதனிடையே, துப்​பாக்​கிச்​சூடு நடத்​திய மர்ம நபர் அடுக்​குமாடி குடி​யிருப்​பின் 7வது மாடிக்கு சென்று, துப்​பாக்​கி​யால் தன்னைத் தானே சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார். இந்த துப்​பாக்​கிச்​சூடு சம்​பவத்​துக்​கான காரணம் குறித்து போலீ​ஸார் தீவிர விசாரணை நடத்தி வரு​கின்​றனர். வெள்ளை மாளி​கைக்கு அருகே நடந்த இந்த துப்​பாக்​கிச்​சூடு சம்​பவத்​தால் பெரும் பரபரப்பு ஏற்பட்​டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version