புதுக்கடை அருகே பைங்குளம் அரசு முழு நேர நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நூலகர் துளசி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் சஜீவ், சனல் கருத்துரையாற்றினர். சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியேற்றுவது மற்றும் நூலக வார விழாவை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.