பத்மநாபபுரம்: தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்

0
184

பத்மநாபபுரம் அரண்மனை அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுரம் சுமார் 50 அடி உயரம் கொண்டது. நேற்று(ஜூலை 1) இரவு 8 மணி அளவில் திடீரென செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மள மள வென எரிந்து கோபுரம் முழுவதும் பரவ தொடங்கியது. இது குறித்து அறிந்த மின்வாரிய, தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடம் சென்று மின் இணைப்பை துண்டித்து பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி முழுமையாக தீயணைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here