பத்மநாபபுரம் அரண்மனையில் செருப்பு பாதுகாக்கும் குத்தகை எடுத்து இருந்த ராமச்சந்திரன் (59), மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்து வந்தார். நேற்று வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால், அவரது மகன் மாடியில் சென்று பார்த்தபோது ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டார். இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.














