பத்மநாபபுரம் நகராட்சி 5வது வார்டில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் குறித்து அதிமுக நகர செயலாளர் டேனியல் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் ஆழ்துளை கிணறு அமைப்பதாகவும், அதுவரை தினமும் குடிநீர் வாகனத்தில் வழங்குவதாகவும் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆணையாளர் அளித்த புகாரின் பேரில், தக்கலை போலீஸ் நேற்று 28 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.














