Home கன்னியாகுமரி செய்திகள் பேச்சிப்பாறை: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு

பேச்சிப்பாறை: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு

0

குலசேகரம் அருகே உள்ள பேச்சிப்பாறை  மயிலாறு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் ரூபின் (23). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். கோதையாறு மின்சார வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் மகன் செல்வின் ஜோஸ் ( 23). இவர் பேச்சிப்பாறை பகுதியில் பைக் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரசல் (17) இவர் பள்ளியில் படித்து வருகிறார்.   மூன்று பேரும் நண்பர்கள்.       இவர்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கல்லாறு பகுதியை சென்று சுற்றி பார்ப்பதற்காக ரூபனின் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும்போது வண்டி திடீரென தடுமாறி கீழே பள்ளத்தில் கவிழ்ந்து, அந்த பகுதியில் நின்று இருந்த ரப்பர் மரத்தில் மோதியது.       இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அப்பகுதியினர் மீட்டு குலசேகர அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ரூபன் உயிரிழந்தார். மற்ற ரெண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேச்சிப்பாறை போலீசார் வழக்கு பதிவுசெய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version