தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கணங்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.