ஊரம்பு பகுதியை சேர்ந்த 28 வயதான அஜித்குமார் என்ற மரம் வெட்டும் தொழிலாளி, நேற்று ஊரம்பு பகுதியில் உள்ள ஒரு முடி திருத்தும் கடையின் முன்பக்கம் சாலை ஓரம் முகங்குப்புற படுத்த நிலையில் கிடந்துள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதித்தபோது, வாலிபர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து வாலிபர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














