கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே வினோத் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், ஆறுகாணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வினோத் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இது தற்கொலையா அல்லது கொலையா என ஆறுகாணி காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.