“2026 மட்டுமல்ல… 2031, 2036-ம் ஆண்டிலும் திமுக ஆட்சிதான்!” – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

0
243

 “வரும் 2026 மட்டுமல்ல, 2031, 2036-ம் ஆண்டிலும் தமிழகத்தில் திமுகதான் ஆட்சி அமைக்கும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உதகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “உதகை பயணம் சிறப்பாக அமைந்துள்ளது. மக்களை சந்தித்துப் பேச முடிந்தது. அவர்களது கருத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாது, சுற்றுலா நிமித்தமாக வந்த மக்களின் கருத்தையும் அறிய முடிந்தது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த விவகாரம் தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடன் பேசி, அவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தலிலும் தமிழகத்தில் திமுகதான் ஆட்சி அமைக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here