Home மாநில செய்திகள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நாராயணபுரம், வேளச்சேரி ஏரியில் தூர்வாரும் பணி தொடக்கம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நாராயணபுரம், வேளச்சேரி ஏரியில் தூர்வாரும் பணி தொடக்கம்

0

வடகிழக்கு பரு​வமழை​யின் போது ஏற்​படும் வெள்ள பாதிப்பை குறைக்​கும் வகை​யில், நாராயணபுரம், வேளச்​சேரி ஏரி​களில் தூர்​வாரும் பணியை அமைச்​சர் என்​.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு மேற்​கொண்​டார்.

தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்க உள்ள நிலை​யில், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக மாநிலம் முழு​வதும் ஆறு, ஏரி மற்​றும் குளங்​களைத் தூர்​வாரி சீரமைக்​கும் பணி​கள் போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று வரு​கின்​றன.

குறிப்​பாக, சென்​னை​யில் உள்ள முக்​கிய நீர்​நிலைகளைச் சீரமைக்​கும் பணி​களை நீர்​வளத் துறை அமைச்​சர் என்​.ஆனந்த் நேரில் தொடங்கி வைத்​து, தொடர் ஆய்​வு​களை மேற்​கொண்டு வரு​கிறார்.

அதன்படி, பள்​ளிக்​கரணை நாராயணபுரம் ஏரி மற்​றும் வேளச்​சேரி ஏரி​களில் தூர்வாரும் பணி​களை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்​கொண்​டார். கீழ்க்​கட்​டளை, பல்​லா​வரம் மற்​றும் பள்​ளிக்​கரணை ஏரி​களின் உபரிநீர் இந்த ஏரி வழி​யாகவே சதுப்​புநிலத்தை அடைகிறது.

நிலத்​தடி நீர்​மட்​டத்​தைப் பாது​காக்​க​வும், சூழலியலை மேம்​படுத்​த​வும் மேற்​கொள்​ளப்​படும் இப்​பணி​யில், ஏரி​யில் படர்ந்​துள்ள ஆகா​யத் தாமரைகள் மற்​றும் கழி​வு​கள் அகற்​றப்​படு​கின்​றன.

இதன்​மூலம், பருவமழைக் காலங்​களில் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் வெள்​ளப் பாதிப்பு பெரு​மளவு குறைக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனைத் தொடர்ந்​து, வேளச்​சேரி ஏரியைச் சீரமைக்​கும் பணி​யை​யும் அமைச்​சர் ஆய்வு செய்​தார்.

நகரமய​மாக்​கல் காரண​மாகச் சுருங்​கி​விட்ட போதி​லும், எஞ்​சி​யுள்ள 22.40 ஹெக்​டேர் பரப்​பளவி​லான இந்த ஏரி அப்​பகு​தி​யின் நிலத்​தடி நீருக்கு முக்​கிய ஆதா​ர​மாக உள்​ளது. பெருநிறு​வனங்​களின் சமூகப் பங்​களிப்பு மற்​றும் தன்​னார்​வலர்​களின் பங்​கேற்​புடன், ஏரி​யில் உள்ள பிளாஸ்​டிக் கழி​வு​கள் மற்​றும் ஆகா​யத் தாமரைகள் அகற்​றப்​பட​வுள்​ளன.

இதன்​மூலம், ஏரி​யின் கொள்​ளளவு அதி​கரிக்​கப்​பட்​டு, மழைநீர் தங்​குதடை​யின்​றிச் செல்ல வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. முன்​ன​தாக, கடந்த 27-ம் தேதி கோயம்​பேடு கூவம் நதி மற்​றும் ஒக்​கி​யம் மடுவு ஆகிய இடங்​களி​லும், நேற்​று​முன்​தினம் மணப்​பாக்​கம் அடை​யாறு ஆறு மற்​றும் சோழிங்​கநல்​லூர் பக்​கிங்​ஹாம் கால்​வாய் ஆகிய இடங்​களி​லும் தூர்​வாரும் பணி​களை அமைச்​சர் தொடங்கி வைத்​தது குறிப்​பிடத்​தக்​கது.

அதி​காரி​களுக்​கு உத்​தரவு

ஆய்​வின் போது, அமைச்​சர் என்​.ஆனந்த், “பரு​வ​மழை தொடங்​கும் முன்​னரே அனைத்​துப் பணி​களை​யும் முழு​மை​யாக முடிக்க வேண்​டும்​” என அதி​காரி​களுக்​கு உத்​தரவிட்​டார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version