உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0
25

 உலோக-கரிம கட்​டமைப்பை உரு​வாக்​கிய ஜப்​பான், ஆஸி மற்​றும் அமெரிக்க ஆராய்ச்​சி​யாளர்​கள் 3 பேருக்கு வேதி​யியலுக்​கான நோபல் பரிசு அறி​விக்கப்பட்டுள்​ளது.

இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. மருத்​துவம் மற்​றும் இயற்​பியலுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் வேதி​யியலுக்​கான நோபல் பரிசும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜப்​பானின் கியோட்டோ பல்​கலைக்​கழகத்​தின் வேதி​யியல் பேராசிரியர் சுசுமு கிடாக​வா, மெல்​போர்ன் பல்​கலைக்​கழக பேராசிரியர் ரிச்​சர்ட் ராப்​சன் மற்​றும் கலி​போர்​னியா பல்​கலைக்​கழக பேராசிரியர் உமர் எம். யாகி ஆகியோர் உலோக – கரிம கட்​ட மைப்பை உரு​வாக்​கும் ஆய்​வில் ஈடு​பட்​டனர். இவர்​கள் உரு​வாக்​கிய கட்​டமைப்​பில் உள்ள பள்​ளங்​களில் மூலக்​கூறுகள் உள்​வந்து வெளியே செல்​லும். பாலை​வனப் பகுதி காற்​றி​லிருந்து தண்​ணீரை எடுக்​க​வும், தண்​ணீரில் உள்ள மாசுக்​களை அகற்​ற​வும், கார்​பன் டை ஆக்​சைடை ஈர்க்​க​வும், ஹைட்​ரஜனை சேமிக்​க​வும், இந்த உலோக -கரிம கட்​டமைப்பை ஆராய்ச்​சி​யாளர்​கள் பயன்​படுத்​தினர்.

வேதி​யியல் ஆராய்ச்​சி​யாளர்​கள் சந்திக்கும் சவால்​களுக்கு தீர்வு காண உலோக – கரிம கட்​டமைப்பு புதிய வாய்ப்​பு​களை அளித்​துள்​ள​தால், இந்த கட்​டமைப்பை உரு​வாக்​கிய 3 விஞ்​ஞானிகளுக்​கும் வேதி​யிய லுக்​கான நோபல் பரிசு பகிர்ந்​தளிக்​கப்​படு​வ​தாக ‘தி ராயல் ஸ்வீடன் அறி​வியல் அகாட​மி’ அறி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here