அண்ணாமலையார் கோயிலில் கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம்

0
19

அண்​ணா​மலை​யார் கோயி​லில் கட்​டிடங்​கள் கட்​டக் கூடாது என்று உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில் ராஜகோபுரம் முன்​பாக கோயில் நிதி​யில் வணிக வளாகம் கட்​டு​வதை எதிர்த்து ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான மயி​லாப்​பூர் டி.ஆர்​.ரமேஷ் மற்​றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்​தில் வழக்​கு​கள் தொடர்ந்​திருந்​தனர்.

இந்த வழக்​கு​கள் தொடர்பாக விசாரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ் கு​மார், எஸ்​.சவுந்​தர்குமார் ஆகியோர், கோயிலுக்​குள் எந்த கட்​டு​மானப் பணி​களை​யும் மேற்​கொள்​ளக்​கூ​டாது என இடைக்​காலத் தடை விதித்​து, விசா​ரணையை அக்​. 16-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்​ளனர்.

இந்​நிலை​யில், நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், எஸ்​.சவுந்​தர் ஆகியோர் திரு​வண்​ணா​மலைக்கு நேற்று சென்​று, அண்​ணா​மலை​யார் கோயில் ராஜகோபுரம் முன்​பு, அம்​மனி அம்​மன் கோபுரம் அருகே நடை​பெறும் கட்​டு​மான பணி, கோயில் வளாகத்​துக்​குள் உள்ள விருந்​தினர் இல்​லங்​களை ஆய்வு செய்​தனர்.

பின்​னர், கோசாலை பகு​தி​யில் கட்​டு​மானப் பணி​கள் நடை​பெறு​வதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்​து, “கோ​யில் வளாகத்​துக்​குள் நிரந்தர கட்​டிடம் எது​வும் கட்​டக்​கூ​டாது. காத்​திருப்பு அறையை போதிய காற்​றோட்​டத்​துடன், மேல் பகு​தி​யில் சீட் அமைத்​து, குடிநீர் வசதி​யுடன் ஏற்​படுத்​திக்​கொடுங்​கள். பெரிய கட்​டிடம் தேவை இல்​லை.

கோயில் வளாகத்​துக்​குள் கழிப்​பறை​கள் கட்​டக் கூடாது. கோயில் சுவரை எக்​காரணத்​தைக் கொண்​டும் சேதப்​படுத்​தி​விடக் கூடாது. இது​போன்ற கோயிலை தற்​போது அரசாங்​கத்​தால் கட்ட முடி​யு​மா?” என்று அதி​காரி​களிடம் தெரி​வித்​தனர்.

மேலும்​,பிர​சாதக் கடை கட்​டு​வதற்​காக வைத்​திருந்த திட்​டத்​தைப் பார்​வை​யிட்ட நீதிப​தி​கள், கோயிலுக்​குள் எந்​தக் கட்​டிட​மும் கட்ட கூடாது என்று உத்​தர​விட்​டனர். ஆய்​வின்​போது, ஆட்​சி​யர் கா.தர்ப்​பக​ராஜ், மாவட்ட நீதிபதி மதுசூதனன், எஸ்​.பி. எம்​. சு​தாகர், அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் பரணிதரன் மற்​றும் அதி​காரி​கள் உடனிருந்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here