நித்திரவிளை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

0
286

நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகள் ஷாலு (17). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக கடந்த 27ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று (5-ம் தேதி) மாலை 6 மணிக்கு மீண்டும் பெங்களூருக்கு புறப்பட இருந்தார்.
      
பிற்பகல் 3 மணிக்கு திடீரென தனது அறைக்கு சென்றவர்  பின்னர் வெளியில் வரவில்லை. தாயார் கதவை திறந்து பார்த்தபோது மகள் ஷாலு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டார். இது குறித்து நித்திரவிளை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
      
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குமரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here