நித்திரவிளை:   கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ

0
236

நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் நேற்று (பிப்ரவரி 14) இரவு 9 மணி அளவில் கிராத்தூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே பயணிகள் ஆட்டோ ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. 

போலீசார் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ எடை உள்ள ஆறு மூடைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் ஆட்டோவையும் ஆட்டோ ஓட்டி வந்த சின்னத்துறை, ஜூட்ஸ் காலனி பகுதி சேர்ந்த டென்னிஸ்டன் (59) என்பவரையும் நித்திரவிளை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here