பூத்துறை கடற்கரை பகுதியில் நேற்று (ஜூன் 30) இரவு கும்பலாக உட்கார்ந்து மது அருந்துவதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மது அருந்திக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த சர்ச்சில் (26), நிதின் (25), கிறிஸ்டின் (29), பிபின் (26), ஸ்டீவ் டொனோ (27), ரிஜோ (26) ஆகியோரை குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தி, போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.














