நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியில் வேளாங்கண்ணி குருசடி உள்ளது. இந்த குருசடியை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது. அதே பகுதி ரசல்ராஜ் என்பவர் குருசடி விரிவாக்கம் செய்தால் தனது வீடு மறைத்துவிடும் என்று கூறி நேற்று மாலை பணியை தடுத்து நிறுத்தினார்.
இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் அந்த பகுதியில் கூடி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நித்திரவிளை போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்றம் மூலம் முடிவு தேடிக் கொள்ளுங்கள் என்று கூறி, அந்த பகுதியில் குவிந்தவர்களை கலைந்து போக கூறினார்கள்.