நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் மனைவி கமலம். இவர்களது 3வது மகன் வினு. இவர் கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று கிராத்தூருக்கு வந்த வினு தனது மூத்த சகோதரர் வீட்டில் சென்று தகராறு செய்தார்.
இதைக் கண்ட தாயும் தந்தையும் அங்கு வந்து வினுவைத் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வினு பெற்றோரைக் கீழே தள்ளியதில் கமலத்தின் தலையில் பெருத்த காயம் ஏற்பட்டு, குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் உள்ளார். நித்திரவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து வினுவைக் கைது செய்தனர்.














