காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை 2017 ஆம் ஆண்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து, பணகுடி பகுதியைச் சேர்ந்த ஆஷிப் முகம்மது (22) என்பவர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷிப் முகம்மதுவைக் கைது செய்தனர். இந்த பலாத்கார வழக்கில், நேற்று மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரையா, ஆஷிப் முகம்மதுவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.