மங்காடு ஆற்று பாலம் வழியாக மண்ணெண்ணெயுடன் வாகனம் வருவதாக நித்திரவிளை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்து, டிரைவர் ஜான் பெஸ்கியை (43) விசாரணை நடத்தினர். அவர் மானிய விலையில் ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெயை மீனவர்களிடம் வாங்கி கேரளாவில் விற்பனை செய்ய வந்ததாகத் தெரிவித்தார். போலீசார் மண்ணெண்ணெய் மற்றும் வாகனத்துடன் குடிமைப் பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.