நித்திரவிளை சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கேரள பதிவெண் கொண்ட பயணிகள் ஆட்டோவில் இருந்து 7 கேன்களில் 200 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பொழியூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏசுதாஸ் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் ஆட்டோ நாகர்கோவில் புட்செல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.