நித்திரவிளை அருகே சாத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெபின் தாஸ், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தனது மனைவி நிஷாவை, நேற்று சாலையோரம் பேருந்து ஏறுவதற்காக நின்றிருந்தபோது தகாத வார்த்தைகள் பேசி அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நித்திரவிளை போலீசார் ஜெபின்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.