கிள்ளியூர், மங்காடு ஊராட்சிக்குட்பட்ட குழிச்சாணி பகுதியில் இருந்த அரசு தொலைக்காட்சி பெட்டி அறையை நேற்று முன்தினம் பட்டப் பகலில் 4 பேர் கொண்ட கும்பல் கடப்பாரையால் இடித்து தள்ளியது. ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வந்த இந்த கட்டிடம் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலானது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














