நித்திரவிளை, எஸ்டி மாங்காடு பகுதியைச் சேர்ந்த சாரதா (73) என்பவர், பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது, ரூட்சன் (23) ஓட்டி வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














