கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட வைக்கல்லூர் ஆற்றில் பரக்காணி தடுப்பணையில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண் அரிப்பு ஏற்பட்டது. மண் அரிந்து சென்ற பகுதியை சீரமைக்க தமிழக அரசு 2 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த பணிக்கு அரசாணை மூலம் சிற்றாறு அணை 2 -ல் இருந்து மண் எடுக்கப்பட்டு, ஆற்றின் கரையை நிரப்பும் பணி நடக்கிறது.
இந்த பணியினை நீர்வளத் துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரமேஷ் நேற்று (ஜூலை 22) ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி உட்பட பலர் உடன் இருந்தனர்