நித்திரவிளை அருகே, 15 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக் வாகன சோதனையின் போது சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு, பைக் சிறுவனின் தாயாருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஷோபா (39) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.