குமரியில் உள்ள ஏவிஎம் கால்வாயில் இரவில் சமூக விரோதிகள் குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை கொட்டி செல்வது வாடிக்கையாக உள்ளது. டிச.11 இரவு இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில், கால்வாயில் மனிதக் கழிவுகளை கொட்ட வந்த வாகனம் பொது மக்களால் சிறைபிடிக்கப்பட்டு நித்திரவிளை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. மீனவ கிராமங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் கால்வாயில் நள்ளிரவில் மனிதக் கழிவுகளை கொட்ட வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














