நித்திரவிளை: திருமணமாகி ஒரேநாளில் புதுப்பெண்ணுக்கு சித்ரவதை

0
173

நித்திரவிளை அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி (25) என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (29) என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான மறுநாளிலிருந்தே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அஸ்வினியை ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி இரவு 9 மணியளவில் மாமியார் ஜெயந்தி (55), கணவர் ஜெகதீஷ், கணவரின் தங்கை ஜெகதி (27) ஆகியோர் இணைந்து அஸ்வினியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். புகாரின்பேரில் நித்திரவிளை போலீசார், மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here