இந்தியா விடுத்த வேண்டுகோளால் நீரவ் மோடி சகோதரர் அமெரிக்காவில் கைது

0
113

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். இந்தியாவில் வைர வியாபாரம் செய்த நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், தனது பங்குதாரர்கள் மற்றும் தனது மாமா மெகுல் ஷோக்ஸி ஆகியோருடன் இணைந்து ரூ.28,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்தார்.

இந்த பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப இவரது தம்பி நெஹல் மோடி உதவினார். இருவர் மீதும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, மோசடி மற்றும் குற்றச் சதி வழக்கு பதிவு செய்தது. இவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடப்பட்டது. லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர வழக்கு நடைபெற்று வருகிறது.

அதே​போல் அமெரிக்​கா​வில் உள்ள நீரவ் மோடி​யின் சகோ​தரர் நெஹல் மோடியை கைது செய்து இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டது. அதன்​படி அவர் நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டார். இவர் வரும் 17-ம் தேதி அமெரிக்க நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​படு​கிறார். அவர் ஜாமீன் கோரி​னால் அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவிக்​கும் எனத்​ தெரி​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here