Home கன்னியாகுமரி செய்திகள் நித்திரவிளை: லாரி – சொகுசுகார் மோதல்;  ஒருவர் படுகாயம்

நித்திரவிளை: லாரி – சொகுசுகார் மோதல்;  ஒருவர் படுகாயம்

0

புதுக்கடை அருகே உள்ள உதச்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் குமார். இவர் நேற்று (அக்.,24) மேற்கு கடற்கரை சாலையில் தனது காரில் நித்திரவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் காஞ்சாம்புறம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டாரஸ் டிப்பர் லாரி ஒன்று கிரிஷ் குமார் கார் மீது மோதியது.

இதில் சொகுசு கார் பின்னோக்கி தூக்கி வீசப்பட்டது. அப்போது சொகுசு காரின் பின்னால் நெய்யூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (44) என்பவர் வந்த பைக்கின் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெகதீசன் பலத்த காயம் அடைந்தார்.

பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஜெகதீசன் நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து  வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற நித்திரவிளை போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version