புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் மற்றும் போலீசார் நேற்று காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அவரிடம் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அதே பகுதியிலுள்ள கண்ணன்கரை என்ற இடத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜன் என்பதும், மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.