டென்மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்சன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில், அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற போலி வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அவர் கண் கலங்கினார்.
ஓபன் ஏஐ மற்றும் கூகுளில் உள்ள வீடியோ உபகரணங்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் போலி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இது அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துகிறது.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடுவதை தடுக்க அடுத்தாண்டு தொடக்கத்தில் புதிய சட்டம் கொண்டு வர டென்மார்க் முடிவெடுத்துள்ளது.














