நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் மனைவி விமலா (50). நேற்று மாலை இடவிளாகம் பகுதியில் மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று திடீரென நடந்து சென்ற விமலா மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்தவரை மகள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் நட்டாலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.