கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சூரங்குடியை சேர்ந்தவர் சுபாஷ்(71). இவர் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு திருவனந்தபுரம் சென்றார். திரும்பி வந்தபோது அவர் ஸ்கூட்டர் திருட்டுப் போயிருந்தது. இது குறித்து கோட்டாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதில் பைக்கை திருடியது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுபின் என்பது தெரிய வந்த நிலையில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.