சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தான் வென்ற தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷிடம் நேற்று காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.














