பி எஃப் தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பி எஃப் மண்டல அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாகர்கோவில் பி எஃப் மண்டல அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தச் சென்ற போது அதிகாரிகள் இல்லாததால் தரையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர்.














