நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை இம்மாதம் 26ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11:15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். தாம்பரத்தில் இருந்து 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.