கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட சென்டர் மீடியன்கள் தற்போது விபத்துகளுக்கு காரணமாகி வருகின்றன. குறுகிய சாலைகளில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால், இந்த சென்டர் மீடியன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














