கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியக் கால்வாய்களில் ஒன்றான அனந்தனார் கால்வாயில் காலதாமதமாக தண்ணீர் வழங்கியதால் நெல் பயிர் பாதிக்கப்பட்டு. இதில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், தவறான அறிக்கை வெளியிட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கன்னியாகுமரி மாவட்ட பாசன நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் அதிகாரியைச் சந்தித்து மனு அளித்தனர்.