கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சுமார் ரூ. 5 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ கட்டிடப் பணிகளை நேற்று (ஏப்ரல் 10) தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் தமிழ்நாட்டிலேயே ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது என பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள், மேயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














