நாகர்கோவில்: சாலையோரம் மயங்கி கிடந்த தொழிலாளி மரணம்

0
439

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (45), தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி பிரேமலதா முத்துக்குமாரை விட்டு பிரிந்து கோவையில் உள்ள தனது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். முத்துக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் (அக்.,23) இவர் பீச்ரோடு பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துக்குமார் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here