கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் சாலையின் நடுவில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சாலையை சீரமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.