கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, காலியான மேயர் பதவிக்கு துணை மேயர் மேரி பிரின்சி லதா நேற்று பொறுப்பு மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
