கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகளுடன் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை அமைத்தல், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் வடிகால் ஓடைகளை சீரமைத்தல், அருகில் உள்ள தெருக்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுத்தல், போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் அமைத்தல் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் அனந்த லெட்சுமி, ரமேஷ், மாநகர துணை செயலாளர் ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.














