கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் இறைச்சி வியாபாரம் செய்து வந்த சிவராஜ் என்பவரை எஸ்ஐ இங்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறி உபகரணங்களை பறித்து சென்றதன் காரணமாக அவர் காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தில் தனது கணவரை தற்கொலைக்கு தூண்டிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.